Friday, September 21, 2007

ஊடல் சுகம்

நான் பூக்களையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பூக்களின் மீதும்
உங்களுக்கு
காதலாஎன்கிறாய் நீ....

இல்லை இல்லை
ஊடலின் மீதும்
ஊடல்சார்ந்த
கூடலின் மீதும்
காதல் என்கிறேன் நான்...

கேள்விக்குறியாய்
நெளிகிறது
உன் புருவம்.....

உன்னிலும் சிறந்த
ஏதேனும் ஒன்று
இப் பூவிலும்
இருந்துவிடக் கூடாதா
என்னுமொரு கோணத்தில்
பூக்களின் மீது
பதிகிறது என் பார்வை..

இறுதியில்
தோற்றுப் போகிறது
பூக்களும்
என் ஊடலும்........

0 comments: